இறைவனுக்கு அஞ்சுங்கள்!
UPDATED : அக் 24, 2012 | ADDED : அக் 24, 2012
* ஒருவரை ஒருவர் நிந்தனை செய்தால் வீண்பழி சுமத்தினால் விளைகின்ற பாவம் யார் அந்தச் செயலை முதலாவதாக தொடங்கினாரோ அவரையே சேரும்.* ஒருவர் தனது குடும்பத்தை அழகுபடுத்தினால் அவருக்கு சொர்க்கத்தில் மேல்பகுதியில்(உயரத்தில்) ஒரு இல்லம் கட்டித் தரப்படும்.* இறைவனிடம் மிகவும் கோபத்திற்குரியவர்கள் வீண்தர்க்கம் செய்வதில் திறமைசாலிகள்.* எவரேனும் சரி உன்னிடமுள்ள குறைகளைச் சொல்லி உன்னைத் திட்டினால் நீ அவனுடைய குறைகளைச் சொல்லி திட்டாதே! காரணம் அந்தப் பாவம் அவனையே சேரும்.* எவன் அல்லாஹ்வுக்கு பயப்படவில்லையோ அவனை எல்லாவற்றிற்கும் அல்லாஹ் பயப்படும்படி செய்து விடுவான்.* அறிவுகளுக்குத் தலைமையானது இறையச்சம். இறையச்சத்தின் உதவியினாலேயே சகல ஞானங்களும் உண்டாகின்றன.- நபிகள் நாயகம்