திருமணம் செய்து கொள்ளுங்கள்
* எவரிடத்தும் கையேந்துவதில்லை என்று உறுதிமொழியை ஒருவர் எனக்கு அளித்தால் அவர் சுவனம் செல்வதற்கான உறுதிமொழியை நான் அவருக்கு அளிக்கிறேன்.* பொருளாதார சமத்துவம் இயற்கைக்கு எதிரானது. ஆனால், செல்வம், நீதியின் அடிப்படையில் பங்கிடப்பட வேண்டும்.* தண்ணீர் கிடைக்காத இடத்தில் ஒருவருக்கு குடிக்க தண்ணீர் வழங்குபவன் அவருக்கு வாழ்வு அளித்தவன் போல ஆவான்.* ஒருவன் தன் கையால் உழைப்பதும், மோசடி செய்யாமல், பொய் பேசாமல் ஒருவன் நடத்தும் வாணிபமும் தான் யாவற்றிலும் சிறந்த சம்பாத்தியம்.* உங்களிடம் கண்ணியத்துடன் நடந்து கொள்வது உங்கள் குழந்தைகளின் கடமை. உங்கள் குழந்தைகளைச் சமமாக நடத்துவது உங்களின் கடமை.* ஒருவர் திருமணம் செய்து கொண்டால் அவர் இறைநெறியில் ஒரு பகுதியை நிறைவு செய்து விட்டார். எஞ்சிய பகுதியை இறைவனை அஞ்சி வாழ்வதன் மூலம் பெற்றுக் கொள்ளட்டும். - வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து