பிறருக்கு நேர்வழி காட்டுங்கள்
UPDATED : ஜூலை 23, 2012 | ADDED : ஜூலை 23, 2012
* மனிதர்கள் செய்த உதவியைச் சிந்திப்பதை விட இறைவன் செய்த உதவியை சிந்தனை செய்யுங்கள்.* மற்றவர்களின் குற்றங்களை நோட்டமிடுவதை விட உங்களின் குற்றங்களை நோட்டமிடுங்கள். * உப்பை நீர் கரைப்பது போன்று நற்குணம் உங்கள் பாவங்களை கரைத்துவிடும். கள்ளின் மண்டி தேனைக் கெடுத்து விடுவது போன்று துர்க்குணம் வணக்கங்களைக் கெடுத்துவிடும்.* உன் வாயிலாக, இறைவன் ஒரு மனிதனுக்கு நேர்வழி காட்டுவது இவ்வுலகத்தையும் இதிலுள்ள யாவற்றையும் விட உனக்கு நன்மை பயப்பதாகும்.* எவர் அண்டை வீட்டாரைத் துன்புறுத்துகின்றாரோ அவர் என்னைத் துன்புறுத்தியவராவார்.* தர்மம் செய்ய இயலாதவன் ஒரு நற்செயல் செய்வானாக அல்லது ஒரு கெட்ட செயலில் இருந்து விலகிக் கொள்வானாக. அதுவே அவனது ஈகை.* உங்களை நம்பி ஒருவன் ஒரு செய்தியைச் சொன்னால், அதை அடைக்கலப் பொருள் போல பாதுகாத்து வையுங்கள்.நபிகள் நாயகம்