உள்ளூர் செய்திகள்

வியாபாரத்தில் நேர்மை

* விருந்தில் எல்லோரும் உண்டு முடிவடைவதற்குள், உணவில் இருந்து கையை எடுத்து விடாதீர்கள்.* உங்கள் சொற்படி நடக்கும் ஊழியர்களுக்கு, நீங்கள் உண்பதையே கொடுங்கள். நீங்கள் உடுத்துவதையே உடுத்தச் செய்யுங்கள்.* முதியோருக்கு மரியாதை செலுத்துதல் இறைவனுக்கு மரியாதை செலுத்துவதாகும்.* மறதி என்பது அறிவின் துரதிர்ஷ்டம். அறிவைத் தகுதியற்றவரிடம் உபயோகிப்பது அதனையே இழப்பதற்கு ஒப்பாகும்.* தன் பிழையை உணர்ந்து உண்மையாகவே வருந்துபவன், குற்றம் இழைக்காதவனுக்கு ஒப்பாவான்.* வியாபாரத்தில் உண்மையைச் சொன்னால் அபிவிருத்தி ஏற்படும். பொய் சொன்னால் வியாபாரம் குறையும்.* சகோதரனின் வியாபாரத்தைப் போட்டியிட்டுக் கொண்டு கெடுக்காதீர்கள்.- நபிகள் நாயகம்