வெற்றிக்கான வழி
UPDATED : மார் 01, 2024 | ADDED : மார் 01, 2024
* நல்ல செயல்களில் ஈடுபட்டால் வெற்றி அடைவீர்கள். * விற்பவர், வாங்குபவருக்கு இடையில் பிரச்னை ஏற்பட்டால் பொருளுக்கு உரியவரின் வாதமே ஏற்றுக் கொள்ளப்படும். * கடுமையாகச் சண்டையிடுபவன், பகைமை, வன்மம் கொண்டவன் மன்னிக்கப்படுவதில்லை. * ஒருவரிடம் இருந்து அநியாயமாக ஓர் அங்குலம் எடுத்தாலும், மறுமையில் ஏழு பங்கு துன்பம் வரும். * காலணியை அணியும் போது முதலில் வலது காலையும், கழற்றும் போது இடது காலையும் பயன்படுத்துங்கள். * ஒரு நன்மை செய்பவருக்கு பத்து மடங்கு நன்மை கிடைக்கும். இது எண்ணத்திற்கு ஏற்ப மாறுபடும்.