உள்ளூர் செய்திகள்

நீதிபதிகள் கவனிக்க...

நீதிபதிகளுக்கு நபிகள் நாயகம் சொல்லும் அறிவுரைகள்:* உண்மையை அறிந்து அதன்படி தீர்ப்பு வழங்கியவர் சுவனத்திற்குச் செல்வார். உண்மையை அறிந்தும் அநீதியாக தீர்ப்பு வழங்கியவர், உண்மையை அறியாமலேயே தீர்ப்பு வழங்கியவர் இருவரும் நரகத்திற்குச் செல்வர். * நீதியைக் காப்பாற்ற கடினமாக உழைத்த நீதிபதிக்கு இரண்டு பங்கு நன்மையும், கடினமாக உழைத்தும் தவறு செய்யும் நீதிபதிக்கு ஒரு பங்கு நன்மையும் கிடைக்கும். * லஞ்சம் பெறும் நீதிபதிகள் சாபத்திற்கு ஆளாவர். * கோபமாக இருக்கும் போது யாருக்கும் தீர்ப்பு வழங்க வேண்டாம்.