இறைவனைச் சார்ந்திருப்போம்
* இறைவன் கூறுகின்றான்: இறைவன் எத்தகையவன் எனில், அவன் தான் யாவற்றையும் படைத்து செம்மையாக்கினான். மேலும் (அவர்களுக்கு வேண்டிய அனைத்தையும்) அளவு பட நிர்ணயித்து நேர்வழி காட்டினான்.* மனிதர்களைப் படைத்து வாழ்வாதாரம் வழங்கியதோடு நின்றுவிடாமல், தன் தூதர்கள் வாயிலாக அவர்களை நேர் வழியில் செலுத்தும் பொறுப்பையும் இறைவனே ஏற்றுக் கொண்டான். நேர்வழியை அருள்வதும் இறைப்பண்புகளில் ஒன்றாகும்.* இறைவன் தான் தன் அடியார் மீது தெளிவான வசனங்களை இறக்கிக் கொண்டிருக்கின்றான். உங்களை இருள்களிலிருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் கொண்டு வருவதற்காக! உண்மை யாதெனில், இறைவன் உங்கள் மீது மிகுந்த பரிவும் கருணையும் கொண்டவனாயிருக்கின்றான்.* இறைவன் உங்களுக்கு உதவி செய்வானாகில் பிறகு எந்த சக்தியும் உங்களை வென்றிட முடியாது. மேலும் உங்களுக்கு அவன் உதவி செய்யாவிட்டாலோ, அதன் பிறகு உங்களுக்கு உதவி செய்யக்கூடியவர் யார்? எனவே வாய்மையான இறை நம்பிக்கையாளர்கள் அனைவரும் இறைவனை முழுமையாக சார்ந்திருக்க வேண்டும்.(வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து)