உள்ளூர் செய்திகள்

நம்பிக்கை காப்போம்

* உங்களைப் படைத்த இறைவனை நேசிக்கிறீர்களா? முதலில் உங்களை போன்ற மனிதர்களை நேசியுங்கள். அப்பொழுது தான் உங்களுக்கு இறைவன் நேசம் கிடைக்கும்.* நம்பிக்கையுடன் உன்னிடம் ஒருவன் கொடுத்த பொருளை உரியவரிடம் கொடுத்து விடு. உனக்கு எவன் மோசடி செய்தானோ அவனுக்கு நீ மோசடி செய்யாதே.* அல்லாஹ் ஒருவனை அழித்து விட வேண்டும் என்று நாடினால் மோசடிகளின் வாசல்களை அவனுக்கு திறந்து விடுகிறான்.* உமது உற்ற தோழரிடம் பொய்யை உண்மை என்று கூறுவது மாபெரும் மோசடியாகும்.* எந்த தலைவன் பொது மக்களுக்கு சேவை செய்யாமல் மோசடி செய்கிறானோ அவன் சுவர்க்கம் நுழைய மாட்டான்.* ஒரு மனிதனைப் பற்றி விசாரிக்காதீர். அவனுடைய நண்பனை தெரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் ஒவ்வொருவரும் தனது நண்பனைத் தான் பின்பற்றுவான்.- நபிகள் நாயகம்