உள்ளூர் செய்திகள்

சமாதானமாக வாழுங்கள்

* எவன், ஒருவனின் மானத்தை வெளிப்படுத்துகிறானோ, அவனுடைய மானத்தை அல்லாஹ் வெளிப்படுத்துகின்றான். * எவன் ஒருவனைக் காட்டிக் கொடுக்கிறானோ, அவனை இறைவன் காட்டிக் கொடுக்கின்றான்.* யாரின் முகத்திலும் கையால் அறையாதீர்கள். முகத்தை அல்லாஹ் தனது கையால் படைத்து இருக்கின்றான்.* தொழுகையை அதன் நேரத்தில் தொழுவதில் விரைந்து கொள்ளுங்கள்.* கைப்பொருள் கைவிட்டுப் போவதற்கு முன் தான தருமங்கள் கொடுப்பதில் விரைந்து கொள்ளுங்கள்.* வயது வந்த பெண்மக்களை திருமணம் செய்து வைப்பதில் விரைந்து கொள்ளுங்கள்.* மரணம் வரும் முன்பு மறுமைக்குரிய நற்செயல் ஆற்றுவதில் விரைந்து கொள்ளுங்கள்.* மனசஞ்சலம் உண்டாவதற்கு முன் உங்களுக்கிடையே ஏற்படும் சச்சரவுகளை சமாதானம் மூலம் தீர்த்துக் கொள்ள முயலுங்கள். - நபிகள் நாயகம்