நல்ல பெயர் வையுங்கள்
* குறைந்த செலவில் அமையப் பெற்ற திருமணமே இறையருளை அள்ளித் தருவதாகும்.* யார் எனது நாற்பது மொழிகளை (உலகில்) போதித்துவிட்டு மரணிப்பாரோ அவர் சொர்க்கப் பூங்காவில் எனது தோழராகிவிடுவார்.* பெண்களை நல்ல முறையில் நடத்துமாறு அல்லாஹ் கட்டளையிடுகின்றான்! எனென்றால் அவர்களே உங்களின் தாயாராகவும், மகளாகவும், மாமியாராகவும் இருக்கின்றனர்.* நீங்கள் கற்புடையவர்களாக இருங்கள், உங்கள் மனைவியரும் கற்புடையவர்களாக இருப்பார்கள்.* மறுமையில் உங்கள் பெயரைக் கொண்டும் உங்கள் தந்தையின் பெயரைக் கொண்டும் நீங்கள் அழைக்கப்படுவீர்கள். எனவே உங்கள் குழந்தைகளுக்கு நல்ல பெயரை வையுங்கள்.* பெண் குழந்தையை விட ஆண் குழந்தைக்கு முதன்மை அந்தஸ்து கொடுக்காமலிருக்கும் ஒருவரை நிச்சயம் அல்லாஹ் சொர்க்கத்தில் நுழைய வைப்பான்.* எவர் மரணித்துவிட்ட குழந்தையின் தாயிடம் சென்று ஆறுதல் கூறுகிறாரோ. அவருக்கு சொர்க்கத்தின் போர்வையை போர்த்தப்படும்.-நபிகள் நாயகம்