உதவியவரைப் புகழுங்கள்
* மனிதனுக்கு பணத்தின் மீது பேராசை நிறைந்திருக்கின்றது. இரு ஓடைகள் நிறைய பொருள் கிடைத்தாலும் அவன் மனம் திருப்தி அடையாது. * பேராசையை விட்டும் உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். பாவங்களைச் செய்வதற்குத் தூண்டுகோலாக இருப்பது பேராசையே.* செல்வந்தனாக வேண்டும் என்று பேராசை கொள்ளாதீர்கள். அது உங்களை நேர்மையை விட்டும் தூரமாக்கிவிடும்.* ஒருவர் செய்த உதவிக்கு கைமாறு செய்வது அவசியம். அவ்வாறு செய்ய முடியாவிட்டால் உதவி செய்தவரை புகழ்ந்து கொண்டே இருக்கவேண்டும். * பக்குவமில்லாத காட்டுமிருகங்கள் மனிதனை விட்டு பயந்து ஓடுவது போல, இறைவனின் பேரருளும் நன்றி கெட்டவனிடமிருந்தும் ஓடி விடும்.* மனிதனிடமுள்ள முடியாமை, பலவீனங்களை உணர்ந்தால் தான் நன்றி உணர்வு ஏற்படுவது சாத்தியமாகும்.* உலகம் ஒரு பாலம். அதைக் கடந்து செல்ல முயற்சி செய்யுங்கள். அந்த பாலத்திலேயே கட்டிடம் கட்டி தங்குவதற்குச் சிந்தனை செய்யாதீர்கள்.- நபிகள் நாயகம்