படியுங்கள்! படியுங்கள்!
UPDATED : மே 09, 2013 | ADDED : மே 09, 2013
* மக்களைத் தன்பக்கம் இழுப்பதற்காக ஒருவன் கல்வி கற்பானாயின் அவனை அல்லாஹ் நரகத்தில் நுழைய செய்வான்.* ஒருவன் கல்வியைத் தேடி அந்தப் பாதையில் நடந்தால் அந்தப் பாதையை அல்லாஹ் சொர்க்கப் பாதையாக ஆக்குகிறான்.* கற்ற கல்வியைப் பற்றி ஒருவரிடம் வினவப்பட்டும், அவன் கூறாமல் அதை மறைப்பானாயின் மறுமையில் நெருப்பாலான கடிவாளத்தைக் கொண்டு கடிவாளமிடப்படுவான்.* மார்க்க அறிவாளிகளை மட்டம் தட்டவும், முட்டாள்களிடம் பெருமை அடிக்கவும் கல்வியை கற்காதீர்கள்.* கல்வியின் மூலம் பெரும் பதவிகளை தேடிக் கொள்ளாதீர்கள். இவ்வாறு ஒருவன் செயல்பட்டால் அவனுக்கு நரகம் தான் கிடைக்கும்.* அறிவும் பொருளும் ஒவ்வொரு குறைகளையும் மறைக்கும். அறியாமையும் மிடுமையும் ஒவ்வொரு குறைகளையும் வெளிப்படுத்தும்.* கல்வியைக் கற்றுக் கொள்ளுங்கள். அதன் கண்ணியத்தையும் கற்றுக் கொள்ளுங்கள்.- நபிகள் நாயகம்