ஆசைகளைக் குறையுங்கள்
UPDATED : நவ 11, 2012 | ADDED : நவ 11, 2012
* நிச்சயமாக ஒவ்வொரு மார்க்கத்திற்கும் ஒவ்வொரு குணம் உண்டு. இஸ்லாத்தின் குணம் வெட்கப்படுவதாகும்.* எவர் ஒருவர் இறைவனிடத்தில் (தேவையானதை) கேட்கவில்லையோ அவர்மீது இறைவன் கோபம் அடைகின்றான்.* பிரார்த்தனையைத் தவிர வேறு எந்த செயலாலும் விதியை மாற்றிக் கொள்ள முடியாது.* நற்செயல்களைத் தவிர வேறு எந்தச் செயலாலும் ஆயுளை நீடிக்கச் செய்ய முடியாது.* எவர் தமது குடும்பத்தின் நன்மையைக் கருதி செலவு செய்கின்றாரோ, அவருக்கு அல்லாஹ் தர்மத்தின் நன்மையை அளிக்கின்றான்.* அடிமை, ஏழை ஆகியவர்களுக்கு தானம் அளிப்பதை விட அதிகமான நன்மை, மனைவிக்குச் செலவு செய்வதில் உண்டு.* முதலில் முக்கியமாக நமது குடும்பத்தினருக்கு செலவு செய்வது நம் கடமை. பின்னர் நெருங்கிய உறவினருக்கு செலவு செய்யலாம்.* ஆசைகளையும் தம் தேவைகளையும் குறைத்துக் கொண்டவர்களே சுதந்திரமானவர்கள்.- நபிகள் நாயகம்