முதியோருக்கு மரியாதை
UPDATED : ஜூலை 31, 2012 | ADDED : ஜூலை 31, 2012
* மனதை அடக்கியாண்டு மறுமைக்குப் பயன்படும் பணிகளைச் செய்பவனே அறிவாளி. மனம் போன போக்கில் நடந்து, இறைவன் அருளை எதிர்பார்ப்பவன் முட்டாள்.* நாவு நேர்மையாக இருக்குமானால், இதயம் நேர்மையான வழியில் செல்ல வேண்டும். நேர்மையற்றதாக இருக்குமானால் இதயம் நேர்மையான வழியில் செல்ல முடியாது.* ஒரு காரியத்தை நீர் செய்ய விரும்பினால் அதன் முடிவை எண்ணிப்பாரும். உம் சிந்தனையில் அதன் முடிவு நல்லதாக இருந்தால் அதைச் செய்வீர். இல்லையேல் அதை விட்டு விடும்.* உனக்காக எதை விரும்புகிறாயோ அதையே மற்றவர்களுக்கும் விரும்பு. * பெருமை என்பது உண்மையை ஏற்க மறுப்பதும், மனிதர்களை இழிவாகக் கருதுவதும் ஆகும்.* ஒருவன், முதியவருக்கு அவருடைய வயதிற்காக மரியாதை செய்தால், வயோதிக நிலையில் அவனுக்கு மரியாதை செய்வோரை இறைவன் ஏற்படுத்துகிறான்.- நபிகள் நாயகம்