உள்ளூர் செய்திகள்

எல்லாரிடமும் அன்பு காட்டுக!

* படைப்புகள் அனைத்தும் இறைவனின் குடும்பம். படைப்புகளுக்கு நன்மை புரிபவரே இறைநேசத்திற்கு உரியவர்.* நீங்கள் அன்பு செலுத்தாதவரை இறைநம்பிக்கையாளராக முடியாது. அன்பு என்பது உங்கள் உறவினர் மீது மட்டும் செலுத்தப்படுவது அல்ல. அன்பு அனைவர் மீதும் செலுத்தப்படுவதாகும்.* இறைநம்பிக்கையாளன் நேசத்தின் சிகரமாவான். மக்களை நேசிக்காதவனிடமும், மக்களால் நேசிக்கப்படாதவனிடமும் எந்த நன்மையும் இல்லை.* உங்களுக்கு விரும்புவதையே பிறருக்கும் விரும்பாத வரையில் நீங்கள் உண்மையுள்ள இறை நம்பிக்கையாளர் ஆக முடியாது.* நெருப்பைத் தண்ணீர் அணைத்து விடுவது போல செய்கின்ற தர்மம் பாவங்களை அழித்து விடுகின்றது.* இறைவனிடம் பாவமன்னிப்பைக் கோருங்கள். நான் ஒரு நாளைக்கு நூறுமுறை மன்னிப்பைக் கோருகிறேன். ஒருவன் குர்ஆனை மனனம் செய்து மறந்துவிடுவது பாவத்தின் காரணமே. - நபிகள் நாயகம்