உள்ளூர் செய்திகள்

அமைதியாகப் பேசுங்கள்

* ஒருவன் தன் குழந்தைகளின் உதவிக்கோ அல்லது தனது வயோதிக பெற்றோருக்கு உதவி செய்யவோ வெளியே புறப்படுவானாயின், அவன் அல்லாஹ்வின் பாதையில் செல்கின்றான்.* இருவருக்கிடையில் ஒருவர் சமாதானம் செய்து வைப்பது அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யும் தருமமாகும்.* உங்களுடைய குற்றங்குறைகளைப் போக்கிக் கொள்ளாத நிலையில் மற்றவர்களுடைய குற்றங்களை குறித்துப் பேசாதீர்கள்.* தனது சகோதர முஸ்லிமுக்கு ஒரு முஸ்லிம் உதவி செய்யும் காலமெல்லாம் அல்லாஹ்வும் அவனுக்கு உதவி செய்து கொண்டே இருப்பான்.* உரத்த குரலில் பேசும் மனிதனை அல்லாஹ் வெறுக்கின்றான். அமைதியாகவும், அடக்கமாகவும் பேசும் மனிதனை அல்லாஹ் நேசிக்கின்றான்.* ஒருவனுக்கு என்னைத் தவிர உதவி செய்பவன் யாருமில்லை. அப்படிப்பட்டவனுக்கு அநீதி இழைப்பவன் மீது எனக்கு கடுமையான கோபம் ஏற்படுகிறது என்று இறைவன் கூறுகின்றான்.- நபிகள் நாயகம்