உள்ளூர் செய்திகள்

உண்மையே பேசு

* குணம் கெட்ட ஆயிரம் ஆண்களை விட நற்குணம் கொண்ட ஒரு பெண்ணே சிறந்தவள்.* அநியாயம், அக்கிரமம் செய்பவரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.* தர்மம் செய்வதில் துன்பம் நேர்வதுண்டு. அது அல்லாஹ்வின் கருணைக்கு அறிகுறியாகும்.* தர்மம் செய்வதில் பத்து நன்மை தான் கிடைக்கும். ஆனால் கடன் கொடுப்பதால் பதினெட்டு நன்மை கிடைக்கிறது.* யார் கடன் கொடுக்கல் வாங்கலில் மென்மையாக நடந்து கொள்கிறாரோ, அவருடைய உயிரை மெல்லினமாக வாங்கப்படும்.* அல்லாஹ்விடத்தில் அதிகமாக கோபத்திற்கு உடையவர்கள், அடிக்கடி சண்டை சச்சரவுகளில் ஈடுபாடு கொண்டவர்களே.* பொய்களை விட்டும் உண்மை பேசுவதில் முனையுங்கள். அல்லாஹ்விடமிருந்து சொர்க்கத்தை வாங்கித் தருவதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.- நபிகள் நாயகம்