உள்ளூர் செய்திகள்

உண்மையே பேசுங்கள்

நபிகள் நாயகம்(ஸல்) நவின்றார்கள்* உண்மை கசப்பினும் உண்மையையே பேசுங்கள். (நூல்: பைஹகி)* ஐயத்திற்குரியதை விட்டொழித்து ஐயமில்லாததை பின்பற்றுங்கள். உண்மை அமைதியைத் தருகிறது. பொய் ஐயத்தை உண்டு பண்ணுகிறது. (நூல்: நஸயீ, திர்மிதி)* எவன் பொய்யுரைத்து மக்களை சிரிக்க வைக்கிறானோ அவனுக்கு கேடு தான்!* உங்களில் எவரேனும் தம் குழந்தைக்கு பொருள் கொடுப்பதாக வாக்களித்துவிட்டு, அதனை நிறைவேற்றாமல் விடுவதும் அனுமதிக்கப்பட்டதல்ல. (அதுவும் ஒரு வகையில் பொய்யுரைப்பதே) * வணிகர்களே! சரக்கை விற்பதில் வீண் பேச்சுக்கள் பேசுவதற்கும், பொய்ச்சத்தியம் செய்வதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, நீங்கள் உங்கள் வியாபாரத்தில் தர்மத்தையும் கலந்து விடுங்கள்.* மூன்று நிலைகளில் பொய் கூறுவது அனுமதிக்கப்படுகிறது. 1.போரின் போது 2. மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வேளைகளில் 3.(ஒருவரை ஒருவர் திருப்தியுறச் செய்யும் நோக்கில்) கணவன் மனைவிக்கிடையில் நடைபெறும் உரையாடல்களில்.(வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து)