இறைவன் நேசிப்பது எதை
UPDATED : ஜன 23, 2012 | ADDED : ஜன 23, 2012
* அளவில் சிறிதாக இருப்பினும், தொடர்ந்து நிலையாகச் செய்யும் செயல்களையே இறைவன் நேசிக்கிறான்.* இறைதிருப்தியைப் பெறும் நோக்குடன் மனிதன் தன் குடும்பத்தாருக்கு செலவிடுவதையும் ஓர் அறச்செயலாகவே இறைவன் காண்கின்றான்.* நாணமும், பாதையில் கிடக்கும் தொல்லை தரும் பொருட்களை அப்புறப்படுத்துவதும் இறை நம்பிக்கையின் பகுதிகளாகும்.* தனக்கு விரும்புவதையே தனது சகோதரனுக்கும் விரும்பாத வரை, ஒருவன் இறைநம்பிக்கையாளனாக மாட்டான்.* இறைவன் எந்த மனிதரையும் அவரது சக்திக்கு அதிகமாக சிரமப்படுத்துவதில்லை. சிரமத்திற்குப் பின்னர் இலகுவை இறைவன் உண்டாக்குவான். உண்மையில், சிரமத்துடன் இலகுவும் இருக்கின்றது.* நற்செயல் என்பது நற்குணத்தைப் பெறுவதாகும். எந்தச் செயலை நீ மனதில் நினைத்து, அதனை பிறர் அறிவதை விரும்பவில்லையோ, அது பாவச் செயலாகும்.- வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து