உண்மையான செல்வம் எது?
* எவர் மென்மையை இழந்து விடுகிறாரோ, அவர் நன்மைகள் அனைத்தையும் இழந்து விடுகிறார்.* செல்வவளம் என்பது அதிக செல்வத்தைப் பெறுவதல்ல. போதுமென்ற மனதைப் பெறுவதே உண்மையான செல்வம்.* பூமியில் செருக்குடன் நடக்காதீர். ஏனெனில், உம்மால் பூமியைப் பிளந்துவிட முடியாது. மலையளவுக்கு உயர்ந்து விடவும் முடியாது!* செயல்கள் அனைத்தின் விளைவுகளும் எண்ணத்தைப் பொறுத்தே அமைகின்றன. மனிதன் எதை எண்ணுகின்றானோ அதற்குரிய பலன் தான் அவனுக்குக் கிட்டும்.* இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை, மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் தான் பார்க்கிறான்.* நெருப்பு விறகை அழித்துவிடுவது போல் பொறாமை நற்செயல்களை அழித்து விடுகின்றது.* கொடுமைக்குள்ளானவனின் பிரார்த்தனைக்கு அஞ்சுங்கள், ஏனென்றால், அந்தப் பிரார்த்தனைக்கும் இறைவனுக்குமிடையில் திரை கிடையாது. (இறைவனால் விரைந்து ஏற்றுக் கொள்ளப்படும்)- வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து