உள்ளூர் செய்திகள்

யாதும் ஊரே! யாவரும் கேளிர்!

* இறைவன் ஒருவனே! அவனே அகிலத்தையும் அகிலத்தாரையும் படைத்தான். எனவே, அனைத்து நாடுகளும், அனைத்து மனிதர்களும் சமமே. இறைவனின் வழிகாட்டுதலும் அனைவருக்கும் பொதுவானதே!இறைவன் கூறுகின்றான்: (நபியே கூறுவீராக!)* வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும், அகிலத்தார் அனைவரையும் பரிபாலிப்பவனுமாகிய இறைவனுக்கே எல்லாப் புகழும்! (திருக்குர்ஆன் 45: 36)* கிழக்கு, மேற்கு மற்றும் அவற்றிற்கிடையேயுள்ள அனைத்திற்கும் அவன் அதிபதியாவான்.* உங்களின் இந்த சமுதாயம் உண்மையில் ஒரே ஒரு சமுதாயமே. மேலும், நானே உங்கள் அதிபதி. எனவே, நீங்கள் எனக்கே அடிபணியுங்கள்.* (நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு ஓர் அருட்கொடையாகவே அனுப்பியுள்ளோம்.* (இந்தக் குர்ஆன்) அகிலத்தார் அனைவருக்கும் ஒரு நல்லுரையாகவே இருக்கிறது. * படைப்புகள் அனைத்தும் இறைவனின் குடும்பமாகும். அவற்றை நேசிப்பவனே இறைவனை நேசிப்பவனாவான். - நபிகள் நாயகம்(ஸல்) (நூல்: பைஹகி)(வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து)