இளமையிலேயே கடமையாற்றுங்கள்
* யாருடைய குற்றங்களையும் காணாதே. பிறரது குற்றங்களைக் காணத் தொடங்கினால் அதுவே கடைசியில் உங்கள் இயல்பாகிவிடும்.* மனித உடம்பு நிலையற்றது. இப்போது இருக்கிறது. ஆனால், அடுத்த கணம் இல்லாமல் போய்விடும். அதற்குள் உன்னால் முடிந்த நல்ல செயல்களைச் செய்வது மேலானது.* சாதனை ஆகட்டும். தவமாகட்டும். தீர்த்த யாத்திரை ஆகட்டும். பணம் சம்பாதிப்பது ஆகட்டும். எந்த நல்ல செயலையும் செய்வதென்று தீர்மானித்து விட்டால் அதை இளமையிலேயே செய்துவிடுங்கள்.* ஆசையின் சாயலே நம் மனதில் அற்றுப் போக வேண்டும். அப்போது தான் பிறவியில் இருந்து விடுதலை கிடைக்கும். * நீங்கள் ஒரு நற்பணி செய்தால், அதனால் உங்கள் பாவச்சுமை விலகும். தியானம், ஜபம், தெய்வீகச் சிந்தனை இவற்றால் பாவம் குறைவதோடு புண்ணியபலன் நம்மை வந்தடையும். * யார் என்ன சொன்னாலும், மனதிற்குச் சரியென்று பட்டதை துணிவோடு செய்து முடியுங்கள். நிச்சயம் கடவுளின் துணை உங்களுக்கு கைகொடுக்கும். -சாரதாதேவியார்