உள்ளூர் செய்திகள்

இளமையிலேயே தேடுங்கள்

* ஆன்மிகப் பயிற்சிகளை பொறுத்த வரை கணவனும் மனைவியும் ஒரே கருத்து உடையவர்களாக இருந்தால் எளிதாக முன்னேறலாம்.* வாழ்வின் லட்சியம் இறைவனைக் காண்பதும், எப்போதும் அவரது நினைவில் மூழ்கிக் கிடப்பதுமே ஆகும்.* தூய உணவின் மூலம் தூய ரத்தத்தையும், பலத்தையும் பெறுவது போல், தூய மனத்தால் அன்பான பக்தியை நம்மிடையே வளர்த்துக் கொள்ளலாம்.* இல்லறக் கடமைகளைச் செய்யும்போதே பிரார்த்தனைக்கும் நேரம் ஒதுக்க வேண்டும்.* வாழ்வில் துன்பங்களையும், துயரங்களையும் அடைந்த பின்னரே இறைவனைத் பலர் தேடுகின்றனர். ஆனால், இளமையிலேயே இறைவனைத் தேடுபவன் பாக்கியவான்.* இறைவனின் திருநாமத்தை விரல்களைக் கொண்டு ஜபித்து அதன் மூலம் புனிதம் அடைவதற்காகவே விரல்களைக் கடவுள் கொடுத்திருக்கிறார்.- சாரதாதேவியார்