சாதனைக்கான வழி
UPDATED : ஏப் 13, 2015 | ADDED : ஏப் 13, 2015
* சாதிக்க முடியாததையும் சாதிக்கும் ஆற்றல் பக்திக்கு மட்டுமே இருக்கிறது.* உலகில் அனைத்தையும் இயக்குபவர் கடவுளே. அதை உணர்பவர் சிலரே.* எதிர்பார்ப்பு இன்றி அன்பு காட்டுங்கள். அதுவே தூய்மையான அன்பாகும்.* உணவைப் பொறுத்து மனிதனின் குணம் அமையும்.* கடவுளுக்குப் படைக்காமல் உண்ண வேண்டாம். பிரசாதத்தால் நம்முடைய மனம் தூய்மை பெறும்.* சமயத்தில் எச்சரிப்பவனே உண்மையான நண்பன்.* மன அமைதியுடன் வாழ்வதே நம் வாழ்வில் பெற வேண்டிய பொக்கிஷம்.-சாரதாதேவியார்