பெண்ணுக்குப் பெருமை எது
* இறைவனின் திருவடிகளில் சமர்ப்பிக்கப்படும் போது தான் ஒரு மலருக்கு பெருமை உண்டாகிறது. இல்லாவிட்டால் செடியில் இருந்து வாடுவதே அதற்குப் பெருமை.* பெண்ணுக்கு உண்மையான ஆபரணம் நாணம் மட்டுமே. பெண்கள் கோபத்திற்கு ஆளாகக் கூடாது. பொறுமையைக் கடைபிடித்தால் பெண்மைக்குப் பெருமை.* வாழ்க்கையில் திருப்தியைத்தவிர வேறு பெரிய செல்வம் வேறில்லை. பொறுமையை விட மேலான குணமும் இல்லை.*தூய மனமுடையவன், அனைத்து இடங்களையும் தூய்மையானதாகவே காண்கிறான். மனம் தூய்மை பெற சோம்பல் கொள்ளாமல் ஜபமும், தியானமும் செய்ய வேண்டும்.* கடவுளின் அருள் இன்றி உலகில் எதனையும் அடைய முடியாது. உயிர்கள் அனைத்திற்கும் அடைக்கலமாக இருக்கும் கடவுளிடம் சரணடைந்தால், அவரது கருணைக்குப் பாத்திரமாக முடியும்.* உணவை இறைவனுக்குச் சமர்ப்பணம் செய்த பின் உண்ண வேண்டும். இறைப்பிரசாதத்தை உண்பதால் உடலும், உள்ளமும் தூய்மை பெறும்.- சாரதாதேவியார்