விவேகமாக நடந்திடு
UPDATED : ஏப் 20, 2016 | ADDED : ஏப் 20, 2016
* உண்மை எது உண்மையற்றது எது என்பதை உணர்ந்தவனே விவேகி. அவன் கால்கள் வழி தவறுவதில்லை.* கவுரவம் என்ற பெயரில் வழி தவறி நடக்காதீர்கள். கடவுளுக்கு பணிந்து வாழ்வதே உண்மையான கவுரவம்.* எதிலும் எளிமையைப் பின்பற்றுங்கள். குறிப்பாக உணவு, உடையில் ஆடம்பரம் பின்பற்ற வேண்டாம்.* நீங்கள் எந்த செயலில் ஈடுபட்ட போதிலும் மனதில் கடவுளை மட்டுமே சிந்தித்திருக்க வேண்டும்.* சவாரி செய்பவன் குதிரையைப் பராமரிப்பது போல உடம்பையும் அக்கறையாகப் பேண வேண்டும்.- ஷீரடி பாபா