உள்ளூர் செய்திகள்

யாரிடமும் அதிகம் பேச வேண்டாம்

* யாரிடமும் அதிகம் பேச வேண்டாம். பத்து வார்த்தை ஒருவர் பேசினால் பதிலுக்கு ஒரு வார்த்தை பேசினால் போதும். * நமக்கு மனிதப்பிறவி கிடைத்தது மகத்தான வாய்ப்பு. இதை உணர்ந்தவர்களே பயனுள்ள பணிகளில் ஈடுபடுகின்றனர். * கடவுளைத் தரிசிக்க உலகில் பலரும் விருப்பப்படலாம். ஆனால் தகுதி உள்ளவருக்கு மட்டுமே அது கிடைக்கிறது. * பிறர் துன்பம் கண்டு மகிழ்வது பெரும்பாவம். பிறர் இன்பம் கண்டு மகிழ்வது பெரும்புண்ணியம். * பெருந்தன்மையுடன் பிறருக்கு உதவி செய்யுங்கள். வாழ்வின் நெருக்கடி நேரத்திலும் விவேகமாக நடந்து கொள்ளுங்கள். ஷீரடி பாபா