உள்ளூர் செய்திகள்

சமாதானமுடன் வாழுங்கள்

* யாரிடமும் சண்டையிட வேண்டாம். சமாதானத்துடன் வாழுங்கள். பிறர் கடினமாகப் பேசினால் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுங்கள். * இன்பத்தையும், துன்பத்தையும் சமமாக கருதுங்கள். கடவுள் மீது திடமான நம்பிக்கை கொள்ளுங்கள். * வெறும் ஏட்டுக் கல்வியால் பயன் உண்டாவதில்லை. தனக்கும், நாட்டுக்கும் பயனுள்ளவனாக நல்வழியில் நடப்பதே கல்வி கற்றதன் பயனாகும்.* கள்ளம் கபடமற்றவராக இருங்கள். வீண்விவாதத்தில் ஈடுபடாதீர்கள். பிறர் நலனில் அக்கறை செலுத்துங்கள். -ஷீரடி பாபா