பொறுமை நம்மைக் காக்கும்
UPDATED : ஜன 12, 2017 | ADDED : ஜன 12, 2017
* நம்பிக்கையும், பொறுமையும் கொண்ட நல்லவர்களைக் கடவுள் நிச்சயம் காப்பாற்றுவார்.* குதிரை சவாரி செய்பவன், அதைப் பராமரிப்பது போல மனிதன் உடம்பைப் பராமரிக்க வேண்டும்.* பன்றி, நாய், பூனை என அனைத்து உயிர்களிலும் கடவுள் ஒருவரே உலாவிக் கொண்டிருக்கிறார்.* உலக ஆசைகளை விட்டு, கடவுளின் திருவடி மீது மனதை ஒருமுகப்படுத்தினால் அமைதி நிலைக்கும்.* எளிமையாக வாழ்வதில் திருப்தி கொள்ளுங்கள்.- ஷீரடிபாபா