உள்ளூர் செய்திகள்

அனைவருக்கும் சேவை செய்யுங்கள்

* ஆடம்பர வழிபாட்டை ஆண்டவன் எதிர்பார்க்கவில்லை. அன்பும், பணிவும் நிறைந்த ஒரு வணக்கமே போதுமானது.* பசியால் வாடுவோருக்கும், எளியவர்களுக்கும் வயிறார உணவு அளிப்பவனே சிறந்த கொடையாளி.* ஆணவம் சிறிதும் இல்லாமல் கடவுளின் வேலைக்காரன் என்னும் எண்ணத்துடன் அனைவருக்கும் சேவை செய்யுங்கள்.* உடம்பை அறவே புறக்கணிக்கவோ அல்லது விரும்பிச் செல்லமாக பராமரிக்கவோ வேண்டாம்.* போலியான உலக கவுரவத்தை விட்டு விடுங்கள். கடவுளின் சன்னிதியில் தொண்டாற்றுவதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்.ஷீரடி பாபா