எண்ணியதை அடைய வழி
UPDATED : ஜன 20, 2017 | ADDED : ஜன 20, 2017
* எண்ணத்தில் உறுதியும், ஒழுங்கும் அமைந்து விட்டால் எண்ணியதை எல்லாம் எளிதாக அடைய முடியும்.* நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். உடல் நலமோடு இருந்தால் தான் மனதில் நிம்மதி நிலைத்திருக்கும்.* அளவோடு சாப்பிட்டால் உடல் உணவை ஜீரணிக்கும். அதிகமாக சாப்பிட்டால் உணவு உடலை ஜீரணித்து விடும்.* மனதை அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தால் அடங்கி விடும்.- வேதாத்ரி மகரிஷி