சுயநலமா...
UPDATED : ஜன 30, 2025 | ADDED : ஜன 30, 2025
நண்பரைக் காணச் சென்றார் ஒருவர். அவரிடம் பேசும்படி வானவரை அனுப்பினான் இறைவன். நண்பர் மீதுள்ள அன்புக்காக சென்றால் வாழ்த்தவும், சுயநலத்துடன் சென்றால் சபிக்கவும் சொன்னான். வானவர்: எங்கு செல்கிறீர்கள்? நபர்: நண்பரைச் சந்திக்கச் செல்கிறேன்.வானவர்: எதற்காகச் செல்கிறீர்கள்? ஏதேனும் உதவி கேட்டா?நபர்: இல்லை. அவர் மீதுள்ள அன்பால் காணச் செல்கிறேன். வானவர்: உங்களுக்கு சொர்க்கத்தை நிச்சயித்து விட்டான் இறைவன். இதை தெரிவிக்கும்படி கட்டளை வந்துள்ளது. பார்த்தீர்களா... உதவி கேட்டு நண்பர்களிடம் சுயநலமாக செயல்படக் கூடாது.