உள்ளூர் செய்திகள்

அன்பைக்கொடு

சீடர்களுடன் பேசிக் கொண்டிருந்தார் நபிகள் நாயகம். அப்போது முனங்கல் சப்தம் அவருக்கு கேட்டது. உடனே, சப்தம் வந்த இடத்தை நோக்கி சென்றார். அங்கு எலும்பும் தோலுமாக ஒட்டகம் ஒன்று நின்றிருப்பதை பார்த்தார். அதை தடவிக் கொடுத்த போது பசியால் வாடி இருப்பதை உணர்ந்தார். அதன் உரிமையாளரை வரவழைத்தார்.'' இதற்கு உணவளிப்பது உங்களின் கடமையல்லவா'' எனக் கேட்டார். 'அதில் என்ன சந்தேகம்''இது இளமையில் கடுமையாக உழைத்தது தானே. பின்னர் ஏன் வயதானதும் இதை புறக்கணிக்கிறீர்கள்'' என்றார். பதில் சொல்லாமல் அவர் தலைகுனிந்தார்.''பயன் கருதி பிறருக்கு உதவுவது கெட்ட குணம். அதிலும் பிராணிகளிடம் சுயநலத்துடன் இருக்காதீர்கள்'' எனக் கண்டித்தார். '' மன்னியுங்கள் ஐயா'''' மன்னிப்பை நான் எதிர்பார்க்கவில்லை. வாழ்வின் ஆதாரம் அன்பு. அதையே எதிர்பார்க்கிறோம்'' எனச் சொன்னார்.