உள்ளூர் செய்திகள்

உணவு வழங்கியவர்

ஹஸன் என்பவரின் பேரன் ஜைனுல் ஆபிதீன். இவர் மதீனாவில் இருந்த ஏழைகளுக்கு தானே உணவுப் பண்டங்களை கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தவர். ஆனால் சற்று வித்தியாசமாக ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஏழைகளின் வீட்டு திண்ணையில் உணவுப்பண்டங்கள் வைப்பார். யார் இப்படி வைக்கிறார் என எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்படி பத்து வருடங்கள் ஓடின. திடீரென ஒருநாள் உணவுப் பண்டங்கள் இல்லை. அன்றுதான் ஜைனுல் ஆபிதீன் மரணமடைந்தார். அவரது உடலைக் குளிப்பாட்டும்போது உணவுப் பண்டங்களைத் துாக்கியதால் தோளில் ஏற்பட்டிருந்த வடுவைப் பார்த்தபோதுதான் மக்களுக்கு தெரிந்தது. இதுவரை உணவு கொடுத்தது இவர்தான் என்று.