உள்ளூர் செய்திகள்

சிந்தித்து செயலாற்றுங்கள்

ஆராய்ச்சிக்கூடத்திற்கு சென்ற ஒரு மாணவன், ''என்ன ஆராய்ச்சி செய்கிறீர்கள்?'' என அறிவியலாளரிடம் கேட்டான். அதற்கு அவர், ''எந்தப் பொருளையும் கரைத்து விடக்கூடிய திரவத்தை கண்டு பிடிக்கப்போகிறேன்'' என்றார். ''அப்படியானால் அந்த திரவத்தை எந்தப் பொருளில் பாதுகாத்து வைப்பீர்கள்'' எனக்கேட்டான். அவரிடம் பதிலே இல்லை. பார்த்தீர்களா... ஒரு செயலை செய்ய விரும்பினால் அதை உடனே செய்யாதீர்கள். முதலில், 'இதை நாம் ஏன் செய்ய வேண்டும்' என யோசியுங்கள். அப்படி செய்தால் புதிய திட்டம் ஒன்று மனதில் தோன்றலாம். இல்லை எனில் பிறரது ஆலோசனை கிடைக்கலாம். எனவே சிந்தித்து செயலாற்றுங்கள்.