உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / கேள்விக்குறியாகுமா எதிர்காலம்?

கேள்விக்குறியாகுமா எதிர்காலம்?

'எத்தனை காலத்துக்குத் தான் இப்படி ஏமாறுவது...' என புலம்புகின்றனர், காங்., பொதுச் செயலர் பிரியங்காவின் ஆதரவாளர்கள்.கடந்த லோக்சபா தேர்தலை, ராகுல் தலைமையில் காங்கிரஸ் சந்தித்தது. ஆனால், படுதோல்வி தான் கிடைத்தது. லோக்சபாவில் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத அளவுக்கு, மிக குறைவான தொகுதிகளில் மட்டுமே, காங்., வெற்றி பெற்றது. இதனால் வெறுத்துப் போன ராகுல், கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, பிரியங்கா தான் கட்சியின் தலைவராவார் என நினைத்து, அவரை வைத்து காரியம் சாதிப்பதற்காக, அவரைச் சுற்றி ஒரு ஆதரவு வட்டம் உருவானது. ஆனால், அவர்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை. மல்லிகார்ஜுன கார்கே, கட்சியின் தலைவரானார். அதற்கு பின், உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில், காங்., வெற்றி பெற்றால், பிரியங்கா முதல்வராகி விடுவார் என கருதி, அந்த கும்பல், தொடர்ந்து, 'ஜால்ரா' தட்டியது. அதிலும், படுதோல்வி தான் பரிசாக கிடைத்தது. இப்போது, அமேதி அல்லது ரேபரேலி லோக்சபா தொகுதியில் பிரியங்கா கட்டாயம் போட்டியிடுவார் என எதிர்பார்ப்பு நிலவியது. இதையடுத்து, பிரியங்கா ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்தனர்; அதுவும் நடக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்துள்ள அவர்கள், 'பிரியங்காவை நம்பினால், நம் அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகி விடும் போலிருக்கிறதே...' என, கவலைப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை