உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / திருந்தவே மாட்டாரா?

திருந்தவே மாட்டாரா?

'எத்தனை முறை அவமானப்பட்டாலும், இவருக்கு புரியவே புரியாது போலிருக்கிறது...' என, தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் பற்றி கூறுகின்றனர், மஹாராஷ்டிராவில் உள்ள அரசியல்வாதிகள்.இங்கு, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பா.ஜ., தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. மஹாராஷ்டிராவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான சரத் பவார் தான், தேசியவாத காங்கிரசை நிறுவியவர். இவரது சகோதரர் மகன் அஜித் பவார், கட்சியில் சரத் பவாருக்கு வலது கரமாக இருந்தார். இவருக்கென கட்சியில் செல்வாக்கு உண்டு. மூத்த நிர்வாகிகள் பலர், இவரது ஆதரவாளர்களாக உள்ளனர்.இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, அவ்வப்போது கட்சியிலிருந்து சில எம்.எல்.ஏ.,க்களை தன் பக்கம் இழுத்து, எதிர் முகாமுக்கு தாவுவதை வழக்கமாக வைத்துள்ளார், அஜித் பவார். அதன்பின், சரத் பவாரிடம் மீண்டும் வந்து விடுவார். இப்படித் தான், சமீபத்தில் கணிசமான எம்.எல்.ஏ.,க்களுடன் கட்சியை உடைத்து வெளியேறி, பா.ஜ., கூட்டணியில் இணைந்தார், அஜித் பவார்.ஆனால், சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், அஜித் பவாரின் கட்சி ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. சரத் பவார் தரப்போ, எட்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது. மத்திய அமைச்சரவையிலும் அஜித் பவார் தரப்புக்கு இடம் அளிக்கப்படவில்லை. இதனால், அவமானத்தில் கூனி குறுகியுள்ள அஜித் பவாரை பார்த்து, 'எத்தனை முறை அடிபட்டாலும், இவர் திருந்தவே மாட்டார்...' என கிண்டல் அடிக்கின்றனர், சக அரசியல்வாதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

venkatakrishna
ஜூன் 19, 2024 17:37

அஜித் பாவார் எப்பவும் போல் மீண்டும் சரத்பாவார் எம்பி களை தன்பக்கம் இழுத்து பாஜக கூட்டணியில் இணைந்து மந்திரி பதவி பெற வேண்டியது தான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை