உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / வாழ்த்துவது குற்றமா?

வாழ்த்துவது குற்றமா?

'எங்களுக்கு இவர் மீது நம்பிக்கை இல்லை; எப்போது வேண்டுமானாலும் காலை வாரலாம்...' என, தெலுங்கானா முதல்வரும், காங்கிரசைச் சேர்ந்தவருமான ரேவந்த் ரெட்டி பற்றி கூறுகின்றனர், அந்த மாநிலத்தைச் சேர்ந்த, காங்., மூத்த நிர்வாகிகள். மற்ற மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்து வந்த நிலையில், தெலுங்கானாவில் மட்டும் ஆட்சியை பிடித்தது. இதற்கு, ரேவந்த் ரெட்டி தான் காரணம் என கூறி, கட்சியில் மூத்த தலைவர்கள் பலர் இருக்கும்போது, இவருக்கு முதல்வர் பதவியை அளித்தது, காங்கிரஸ் தலைமை.ஆனால், சமீப காலமாக ரேவந்த் ரெட்டியின் நடவடிக்கைகளில் தடுமாற்றம் இருப்பதாக, மூத்த தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். டில்லியில், பா.ஜ., மேலிட தலைவர்களுடன், ரேவந்த் ரெட்டி நெருக்கமாக இருப்பதாக, அவர்கள் கூறுகின்றனர்.சமீபத்தில், முதல்வர் ரேவந்த் ரெட்டியின் பிறந்த நாளுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்; ரேவந்த் ரெட்டி, பிரதமருக்கு நன்றி தெரிவித்தார். மேலும், வளர்ச்சி திட்டங்களுக்காக நிதி ஒதுக்குவதில் தெலுங்கானாவுக்கு மத்திய அரசு தாராளம் காட்டுவதை, இதற்கு காரணமாக, காங்., தலைவர்கள் கூறுகின்றனர். இதை கேள்விப்பட்ட ரேவந்த் ரெட்டி ஆதரவாளர்கள், 'பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிப்பதும், அதற்கு நன்றி தெரிவிப்பதும் ஒரு குற்றமா...' என, புலம்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை