உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் /  சர்வதேச பிரச்னையா?

 சர்வதேச பிரச்னையா?

'தென் மாநிலங்களில் உள்ள அரசியல்வாதிகளில் பலரும், தோளில் துண்டு அணிந்து வருவது வழக்கமான ஒன்று தான். இதை அரசியலாக்கலாமா...' என கவலைப்படுகிறார், கர்நாடக துணை முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சிவகுமார். கர்நா டகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் சட்டசபையில் பேசிய, எதிர்க்கட்சி தலைவரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான அசோக், துணை முதல்வர் சிவகுமாரை கடுமையாக விமர்சித்தார். 'பெங்களூரு நகரம் முழுதும் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெங்களூரை சர்வதேச நகரமாக்குவேன் என கூறிய துணை முதல்வர் சிவகுமாரை, சட்டசபையில் காண முடிவது இல்லை. தோளில் பல வண்ணங்களில் துண்டு அணிவதில் தான் அவர் ஆர்வம் காட்டுகிறார்...' என விமர்சித்தார், அசோக். சபையில் இருந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். 'நீங்கள் கூட துண்டு அணிந்துள்ளீர்கள். இதை ஒரு பெரிய குற்றச்சாட்டாக கூறுகிறீர்களே...' என, சில காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆவேசமாக கூறினர். இதனால், ஆத்திரமடைந்த அசோக், 'நான் அணிந்துள்ள துண்டின் விலை, 150 ரூபாய் தான். வேண்டுமானால், உங்களுக்கு இதை தருகிறேன். ஆனால், சிவகுமார் அணியும் துண்டு, 2.50 லட்சம் ரூபாய் மதிப்புடையது. அவரது துண்டை, யாருக்காவது கொடுப்பாரா...' என்றார். இதை கேள்விப்பட்ட சிவகுமார், 'நான் துண்டு அணிவதை, எதிர்க்கட்சியினர் சர்வதேச பிரச்னையாக்கி விடுவர் போலிருக்கிறதே...' என, பு லம்புகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை