உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / வம்பு இழுப்பது ஏன்?

வம்பு இழுப்பது ஏன்?

'விலகி விலகிப் போனாலும் ஓட ஓட விரட்டுகின்றனரே...' என காங்., முன்னாள் தலைவர் ராகுலின் நிலை குறித்து கவலையுடன் பேசுகின்றனர், அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள்.உத்தர பிரதேசத்தில்ஒரு காலத்தில், காங்கிரஸ் தான் கொடி கட்டி பறந்தது. பல ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆளும் கட்சியாகவும்இருந்தது. சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், பா.ஜ., ஆகிய கட்சிகளின் வளர்ச்சிக்கு பின், காங்கிரசின் செல்வாக்கு சரியத் துவங்கியது. ஆனாலும், இங்குள்ள ரேபரேலி, அமேதி ஆகிய தொகுதிகளில் மட்டும் காங்கிரஸ் தொடர்ச்சியாக வெற்றி பெற்றது. இந்திரா, ராஜிவ், சஞ்சய்ஆகியோர் இந்த தொகுதிகளில் வெற்றி பெற்றதே இதற்கு காரணம்.இவர்களுக்கு பின், சோனியாவும், ராகுலும் இந்த தொகுதிகளில் ஆதிக்கம் செலுத்தினர். ஆனால், கடந்த லோக்சபா தேர்தலில் அமேதியில் ராகுலை தோற்கடித்தார், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி. விரைவில் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், நிலைமை இன்னும் மோசம். உடல் நலத்தை காரணம் காட்டி, ரேபரேலியில் போட்டியிடப் போவது இல்லை என ஒதுங்கி விட்டார், சோனியா. இதனால், உ.பி.,யில் காங்கிரசுக்கு ஒரு சில இடங்களில் இருந்த அடையாளமும் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியோ, 'அமேதியில் போட்டியிட்டு என்னை வெல்ல ராகுல் தயாரா...' என சவால் விட்டுள்ளார். ராகுலின் விசுவாசிகளோ, 'ஒதுங்கி போனாலும்,விடாமல் வம்பு இழுக்கின்றனரே...' என புலம்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை