உள்ளூர் செய்திகள்

அறிவியல் ஆயிரம்

விண்வெளி குப்பையின் புகைப்படம்

விண்வெளி ஆய்வுக்கு அனுப்பப்படும் செயற்கைக்கோள், விண்கலங்கள் அதன் ஆய்வுக்காலம் முடிந்ததும் உடைந்த பாகங்களாக விண்வெளியில் குப்பையாக சுற்றி வருகின்றன. உலகளவில் அதிகரிக்கும் செயற்கைக்கோள், விண்கலத்தால் எதிர்காலத்தில் விண்வெளியில் நெரிசல் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இந்நிலையில் உலகில் முதலாக இந்த விண்வெளி குப்பையை (செயற்கைக் கோளின் உடைந்த பாகம்) மிக அருகில் புகைப்படம் எடுத்து சாதனை படைத்துள்ளது ஜப்பானின் அஸ்ட்ரோ ஸ்கேல் என்ற தனியார் விண்வெளி நிறுவனம்.

தகவல் சுரங்கம்

ஆர்கன் மரங்கள் தினம்முன்பு வட ஆப்ரிக்காவில் இருந்த ஆர்கன் மரங்கள் இன்று மொரோக்கோ நாட்டில் மட்டும் உள்ளது. இது 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை தாங்கி வளரும். இதன் விதைகளில் இருந்து ஆர்கன் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இது உணவு, மருத்துவம், அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. இந்த மரம் குட்டையாக இருப்பதால் ஆடுகள் இதன் மேல் ஏறி இலைகளை மேய்வதற்கு ஏற்றதாக உள்ளது. இதன் ஆயுட்காலம் 200 ஆண்டுகள். இந்த மரங்களை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் மே 10ல் உலக ஆர்கன் தினம் கடைபிடிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ