| ADDED : மே 23, 2024 08:14 PM
மின்னல் தோன்றுவது எப்படி
பூமியில் இருந்து மேலே செல்லும் நீராவி தான் மேகமாக உருவாகிறது. இவை மற்ற மேகங்களுடன் உராய்வதால், 6000 - 7000 டிகிரி செல்சியஸ் வெப்பம் உருவாகிறது. இவை ஒரு பகுதியை விரிவடைய செய்கிறது. பின் அப்பகுதியில் இருந்து ஒரு வித சத்தமும் வெளிச்சமும் வருகிறது. இவை தான் இடி, மின்னல். இரண்டும் ஒரே நேரத்தில் ஏற்பட்டாலும், ஒளியின் வேகம் மணிக்கு 107 கோடி கி.மீ. என்பதால் மின்னல் முதலில் நமக்கு தெரியும். ஒலியின் வேகம் மணிக்கு 1234 கி.மீ., மட்டுமே. இதனால் இடி தாமதமாக கேட்கிறது.தகவல் சுரங்கம்
உலக சகோதரர்கள் தினம்
சகோதரர்களுக்குள் அன்பை வெளிப்படுத்தும்விதமாக மே 24ல் உலக சகோதரர்கள் தினம் கடை பிடிக்கப்படுகிறது. 2005ல் அமெரிக்காவில் தொடங்கப்பட்டாலும் பல நாடுகளிலும் கடை பிடிக்கப்படுகிறது. சண்டைகள் இருந்தாலும், உடன்பிறந்தவருக்கு ஒரு பிரச்னை என வந்துவிட்டால் அண்ணன் - தம்பி ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பர். 'தம்பியுடையான் படைக்கு அஞ்சான்' என்பார்கள். உடன் பிறந்த சகோதரர்கள் இல்லை யென்றாலும், அவர்களுக்கு உறவினர், நண்பர்களிடம் இருந்து சிலர் சகோதரர்கள் போல இருப்பார்கள்.