உள்ளூர் செய்திகள்

அறிவியல் ஆயிரம்

தாவரங்களின் உணவுநீர் எனும் 'எச்2ஓ' வை, சூரிய ஒளியின் ஆற்றலால் எச், ஓ என தாவரங்கள் பிரிக்கும். இதில் தாவரத்துக்கு ஆக்சிஜன் (ஓ) தேவையில்லை என்பதால் அதை உமிழ்ந்துவிடும். தாவரங்களின் இலைகளில் ஏராளமான நுண்துளைகள் உள்ளன. இதன் வழியாக தாவரங்கள் காற்றை சுவாசிக்கின்றன இலைகளில் உள்ள 'பச்சையம்' மூலம் ஒளிச்சேர்க்கை நடைபெறுகிறது. இதன் மூலம் தாவரங்கள், தனக்குத் தேவையான உணவை (கார்பன் டை ஆக்சைடை உள்ளிழுத்து அதனுடன் எச்-ஐப் பிணைத்து குளுக்கோஸ்) தாமே தயாரித்துக் கொள்கிறது.

தகவல் சுரங்கம்

'இடது கை' தினம்உலக மக்கள்தொகையில் 10 சதவீதம் பேர் இடது கை பயன்படுத்தும் பழக்கம் உடையவர்கள் என ஐ.நா., தெரிவிக்கிறது. இவர்களது சாதனைகளை பாராட்டுதல், அவர்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற பொருட்களை தயாரிக்க வலியுறுத்தி ஆக. 13ல் உலக இடது கை பழக்கம் உடையோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இடது கை பழக்கம் ஒருவருக்கு இயற்கையிலேயே அமைந்து விடுகிறது. இது மூளை வளர்ச்சியை பொறுத்து அமைகிறது. இவர்கள் வலது பக்க மூளையை அதிகளவில் பயன்படுத்துவர். இவர்களுக்கு ஞாபக திறன் அதிகமாக இருக்கும்.***********


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ