அறிவியல் ஆயிரம்
பூமியை அச்சுறுத்தும் விண்கல்
'அபோபிஸ்' விண்கல் 2029 ஏப். 13ல் பூமியை கடந்து செல்ல உள்ளது. அப்போது பூமியின் ஈர்ப்பு விசை காரணமாக இது பூமியில் நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பை உருவாக்கும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது பூமியில் இருந்து விண்கல்லின் துாரம் 30,577 கி.மீ. இது 2004 ஜூன் 19ல் கண்டுபிடிக்கப்பட்டது. இது விநாடிக்கு 30.73 கி.மீ. வேகத்தில் சுற்றுகிறது. இதன் விட்டம் 560 அடி. அமெரிக்காவின் ஸ்டேட் எம்பயர் கட்டடத்தை விட பெரியது. இது நேரடியாக பூமியை தாக்கினால் பத்து அணுகுண்டு வெடிப்புக்கு சமமாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.