அறிவியல் ஆயிரம்
ராக்கெட் பறப்பது எப்படிவிண்வெளிக்கு செயற்கைக்கோள், விண்கலம் அனுப்ப ராக்கெட் பயன்படுகிறது. ஒவ்வொரு வினைக்கும் அதற்கு இணையான எதிர்வினை உண்டு என்ற நியூட்டனின் மூன்றாம் விதிதான், ராக்கெட் தத்துவத்தின் அடிப்படை. எனவே ராக்கெட் கொதிகலனில் எரிபொருள்எரிந்து அதன் நாசி எனப்படும் வெளிப்போக்குக் குழாய் வழி வெளியேறும்போது அதற்கு எதிர்திசையில் ராக்கெட்மீது அழுத்தம் ஏற்பட்டு மேல் எழும்பி செல்கிறது.இது நேராக மேல்நோக்கிச் செலுத்துவது போலத் தோன்றினாலும், வளைவான பாதையில் செலுத்தினால்தான் அது பூமியை சுற்றும்படி செய்யமுடியும்.