மறுகுடியேற்றத்தில் பிரச்னை
இலங்கையில் மறுகுடியேற்றம் நிகழும் போது, புலிகளின் வசம் இருந்த பகுதிகளை, இலங்கை அர” எடுக்கும் போது கண்ணிவெடிப் பிரச்னை மிகப்பெரிய சவாலாக உள்ளது. பூமியில் புதைத்து வைக்கப்பட்டுள்ள இந்த வெடிகளை, சரியான முறையில் கையாண்டு செயல் இழக்கச் செய்ய வேண்டும். இவற்றைக் கையாள்வதற்கு முன் கண்டறிவதே மிகப்பெரிய சவால் ஆகும். கண்ணிவெடிகளினால் பொது மக்களே அதிக அளவில் பாதிப்படைகின்றனர். ராணுவத்தில், பாதுகாப்பு படையில் கண்ணி வெடியைக் கண்டறிவதில் பல தொழில் நுட்பங்கள் உள்ளன. கண்ணி வெடியைக் கண்டறிவதில், சில வகை தாவரங்கள் பயன்படுகின்றன. கண்ணி வெடிகளில் இருந்து வெளியேறும் முக்கிய வாயுவான நைட்ரஜன் டை ஆக்சைடு, இந்தச் செடியின் இலைகளின் மீது படும்போது ஏற்படும் நிறமாற்றம், கண்ணிவெடியைக் கண்டறிய உதவுகிறது.
தகவல் சுரங்கம்
மகாகவிக்குப் பெருமை
பாரதியாரின் புகழை வட மாநிலங்களில் பரப்பும் வகையில், வாரணாசியில் அனுமன்காட் என்ற பகுதியில் பாரதியாருக்கு சிலை வைக்கப்பட்டு உள்ளது. அனுமன்காட்டில் உள்ள தமிழர்கள், பாரதியாருக்கு சிலை வைத்திருந்தால் அதில் ஆச்சரியங்கள் இல்லை. ஆனால் உ.பி., மாநில இந்தி சன்ஸ்தான் என்ற இந்தி மொழிக்கான அமைப்பு, இந்தச் சிலையை நிறுவியுள்ளது என்பது ஆச்சரியமான விஷயமாகும். பாரதியார் 1898ல் காசியில் உள்ள தன் அத்தையின் வீட்டுக்குச் சென்றார். பாரதியார் தேசியக்கவியாக மாற, காசி வாழ்க்கை முக்கிய காரணமாகும். பாரதியார் காசியில் வாழ்ந்த அத்தை வீடு, தற்போது சிவமடம் என அழைக்கப்படுகிறது. பாரதியாரின் உறவினர்கள் அந்த வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். காமகோடீஸ்வரர் கோயில் அருகே இந்த வீடு உள்ளது. காசிக்கு செல்லும் தமிழர்கள், அனுமன்காட் பகுதியில் உள்ள பாரதியின் சிலையையும், அவர் வாழ்ந்த வீட்டையும் பற்றி அறிவதில்லை.