உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம்மக்கும் பிளாஸ்டிக்தற்போதைய பிளாஸ்டிக் நுண்துகள் மக்குவதற்கு 100 - 1000 ஆண்டுகள் ஆகிறது. இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன், மனிதனின் உடலுக்குஉள்ளும் கலந்து இருப்பதை விஞ்ஞானிகள் பல ஆய்வுகளில் நிரூபித்தனர். இந்நிலையில் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மக்கும் பிளாஸ்டிக்கை அமெரிக்காவின் கலிபோர்னியா விஞ்ஞானிகள் உருவாக்கிஉள்ளனர். இது புற்றுநோயை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் நுண்துகள்களை உருவாக்காது. ஏனெனில் இது 97 சதவீதம் மக்கும் தன்மை உடையது. இது 6 மாதங்களில் மக்கிவிடும் என சோதனையில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.தகவல் சுரங்கம்உணவை வீணாக்காதீர்பிளாஸ்டிக், மின்னணு என பல்வேறு பொருட்களின்கழிவுகளை முறையாக மேலாண்மை செய்ய வலியுறுத்தி ஐ.நா., சார்பில் மார்ச் 30ல் உலக பூஜ்ஜிய கழிவு மேலாண்மை தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் ஆண்டுக்கு 224 கோடி டன் திட கழிவு மனிதர்களால் உருவாக்கப்படுகிறது. இதில் 55 சதவீதம் மட்டுமே முறையாக மேலாண்மை செய்யப்படுகிறது. 2050ல் இது 388 கோடி டன்னாக உயரும் என ஐ.நா., மதிப்பிட்டுள்ளது. 2040ல் ஆண்டுக்கு உணவு கழிவு 93 கோடி டன், பிளாஸ்டிக் கழிவு 3.7 கோடி டன் கடலில் கலக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ