உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம்மண்வாசம் காரணம்கோடை காலத்துக்குப்பின் முதல் மழை பெய்ததும் 'மண்வாசம்' ஏற்படுவது வழக்கம். இதற்கான காரணத்தை முதன்முதலில் அறிவியல்பூர்வமாக ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் இருவர் வெளியிட்டனர். எளிதில் ஆவியாகும் தாவர எண்ணெய், மண்ணில் உள்ள 'ஆக்டினோமைசைட்' எனும் நுண்ணுயிரி வெளிப்படுத்தும் ஜியோஸ்மின் எனும் வேதிப்பொருள் கலந்த கலவைதான் என 1964ல் கண்டறிந்து தெரிவித்தனர். இந்த நறுமணத்துக்கு பெட்ரிகார் என்ற அறிவியல் பெயர் உண்டு. தவிர தாவரங்கள் வெளியிடும் வியர்வை போன்ற எண்ணெய் பொருட்களும் காரணம்.தகவல் சுரங்கம்உலக சைக்கிள் தினம்சைக்கிள் பயன்பாட்டை மீண்டும் அதிகரிக்கும் விதமாக ஐ.நா., சார்பில் ஜூன் 3ல் உலக சைக்கிள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. தினமும் நடை, ஓட்டம், விளையாட்டு, சைக்கிள் ஓட்டுதல் என ஏதாவது ஒரு வகையில் உடற்பயிற்சி மேற்கொள்வது உடல்நலத்துக்கு நல்லது. இதிலும் நடை, சைக்கிள் பயிற்சி இருதய பாதிப்பு, பக்கவாதம், கேன்சர், நீரிழிவு போன்ற பாதிப்புகளை தடுக்கிறது. சைக்கிளுக்கு எரிபொருள் தேவையில்லை என்பதால் செலவு இல்லை. முக்கியமாக சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உதவுகிறது. தினமும் சைக்கிள் ஓட்டுவதால் உடல் புத்துணர்ச்சி அடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை