உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம்வண்ணங்களின் மாயாஜாலம்வானவில் ஒளிச்சிதறல் மூலம் உருவாகும் ஒரு பிம்பம் தான் வானவில். இதில் கண்ணை கவரும் ஏழு நிறங்கள் வெளிப்படுகின்றன. பொதுவாக காலை, மாலையில் தோன்றுகிறது. சூரியனுக்கு எதிர் திசையில் தோன்றும். இதற்கு மழை மட்டும் காரணம் இல்லை. பனி மூட்டம், காற்றில் மிதக்கும் கண்ணுக்குப்புலப்படாத துாசு, காற்றில் நிறைந்திருக்கும் நீர்த்துளிகளும் காரணம். மழைக்காலத்தில் மேகங்களில்உள்ள நீர்த்துளிகளில் சூரிய ஒளி ஊடுருவும். அந்த ஒளி சிதறலடைந்து நீர்த்துளிகளின் பின்புறமாகஎதிரொலிப்பதால் வானவில் தோன்றுகிறது.தகவல் சுரங்கம்ரஷ்ய மொழி தினம்உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்று ரஷ்யா. அதேபோல ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று. ஐ.நா., வின் அங்கீகரிக்கப்பட்ட ஆறு மொழிகளில் ரஷ்ய மொழி அடங்கும். ரஷ்ய கவிஞரும், நவீன ரஷ்ய மொழியின் தந்தை என அழைக்கப்படுபவருமான அெலக்சாண்டர் புஷ்கினை கவுரவிக்கும் விதமாக அவரது பிறந்த தினமான ஜூன் 6, ரஷ்ய மொழி தினமாக ஐ.நா., வின் யுனெஸ்கோ அமைப்பு 2010ல் அறிவித்தது. ரஷ்ய மொழி பேசுபவர்கள் உலகில் 25 கோடி பேர் உள்ளனர். இது உலகளவில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி