உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம்ஒட்டகசிவிங்கியின் ரகசியம்ஒட்டகசிவிங்கி நீண்ட கழுத்தை கொண்ட உயிரினம். இதற்கான காரணம், விஞ்ஞானிகள் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண் இனத்தை விட பெண் ஒட்டகசிவிங்கியின் கழுத்து நீளமானது. ஏனெனில் இனப்பெருக்கத்துக்காக அதிக உணவு தேவை என்பதால் இப்படி உள்ளது. ஆண் இனத்தின் கழுத்து மிக அகலமாக இருக்கும். மற்ற ஆண் இனத்துடன் சண்டையில் வெற்றி பெறுவதற்காக இப்படி உள்ளதாம். அதே போல பெண் இனத்தின் உடலமைப்பு பெரியதாக இருக்கும். இது கர்பத்துக்காக உள்ளதாம். ஆண் இனத்தின் முன்னங்கால்கள், பெண் இனத்தை விட உயரமாக இருக்கும்.தகவல் சுரங்கம்இந்தியாவின் நியூயார்க்மும்பை பங்குச்சந்தை (பி.எஸ்.இ.,) 1875 ஜூலை 9ல் பிரேம்சந்த் ராய்சந்தால் தொடங்கப்பட்டது. மும்பையின் தலால் தெருவில் உள்ளது. இது 'இந்தியாவின் நியூயார்க்' என அழைக்கப்படுகிறது. உலகின் 7வது பெரிய பங்குச்சந்தையாக உள்ளது. 5300 நிறுவனங்கள் இதில் பட்டியல் இடப்பட்டுள்ளன. தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 1992ல் தொடங்கப்பட்டது. 2200 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இது உலகின் 8வது பெரிய பங்குச்சந்தை. முதலிடத்தில் அமெரிக்காவின் 'நியூயார்க் பங்குச்சந்தை ' உள்ளது. 6330 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை